நாகப்பட்டினம் மாவட்ட சிறு, குறுந்தொழில் சங்க பொதுக்குழு கூட்டம்

 

நாகப்பட்டினம்,செப்.18: நாகப்பட்டினம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்க பொதுக்குழு கூட்டம் நடிசியா சங்க கட்டிடத்தில் நடந்தது.  கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் பாலாஜி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சிவசுப்ரமணியன் வரவு செலவு கணக்கை சமர்பித்தார். வேதாரண்யம் பகுதியில் உப்பு சார்ந்த தொழில் தொடங்க புதிதாக சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் ரூ.36 ஆயிரம் கோடி செலவில் விரிவாக்க பணிகள் நடந்து வரும் நிலையில் அங்கிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு துணை தொழில்கள் தொடங்க இருப்பதால் நாகப்பட்டினம் பகுதியிலும் சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவராக அறிவழகன், செயலாளராக பிரசன்னா, பொருளாளராக பாலாஜி, துணைதலைவராக ஜாகிர்உசேன், இணைச்செயலாளர்களாக தர்மலிங்கம், சுதாகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post நாகப்பட்டினம் மாவட்ட சிறு, குறுந்தொழில் சங்க பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: