×

திருவள்ளூரில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: திருவள்ளூரில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவள்ளூர் மத்திய மாவட்டம், மதுரவாயல் தொகுதி, மதுரவாயல் வடக்கு பகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகப் பொருளாளர் ஜாவித் அகமத் திடீரென அகால மரணமடைந்துவிட்டதால், இப்பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற 21ம் தேதி நடைபெறும். மேலும், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் 21ம் தேதி நடைபெற உள்ள பிற பொதுக்கூட்டங்களை, முன்போ அல்லது பிறகோ நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருவள்ளூரில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ADAPPADI PALANISAMI ,ADAMUKA ,THIRUVALLUR ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,Anna ,Anna Dravitha ,General Secretary ,Development ,Corporation ,Adimuka General Meeting ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு...