×

இந்தியா டி-க்கு 488 ரன் இலக்கு

அனந்தபூர்: இந்தியா ஏ அணியுடனான துலீப் கோப்பை போட்டியில், இந்தியா டி அணிக்கு 488 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனந்தபூரில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ 290 ரன் குவித்து ஆல் அவுட்டாக (ஷாம்ஸ் முலானி 89, தணுஷ்கோடியன் 53, பராக் 37), இந்தியா டி 183 ரன்னில் சுருண்டது (படிக்கல் 92, ராணா 31, ரிக்கி 23). 107 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா ஏ அணி, 3ம் நாளான நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 380 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பிரதம் சிங் 122 ரன், லேப்டன் மயாங்க் அகர்வால் 56, பராக் 20 ரன்னில் பெவிலியன் திரும்பினர். திலக் வர்மா 111 ரன், ஷாஸ்வத் ராவத் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 488 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா டி அணி 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்துள்ளது. யஷ் துபே 15, ரிக்கி புய் 44 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

* அனந்தபூரில் இந்தியா சி அணியுடன் நடக்கும் மற்றொரு போட்டியில் இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற போராடி வருகிறது. இந்தியா சி அணி 525 ரன் ஆல் அவுட் (இஷான் கிஷண் 111, மானவ் சுதர் 82, இந்திரஜித் 78, கேப்டன் கெயிக்வாட் 58). 3ம் நாள் முடிவில் இந்தியா பி 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்துள்ளது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 143 ரன், ராகுல் சாஹர் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

The post இந்தியா டி-க்கு 488 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : India ,Anantapur ,Duleep Cup ,India A ,India D ,Anantapur, India ,Shams Mulani ,Dinakaran ,
× RELATED துலீப் கோப்பை கிரிக்கெட்; இந்தியா சி அபார வெற்றி