×

துலீப் கோப்பை கிரிக்கெட்; இந்தியா சி அபார வெற்றி


அனந்தபூர்: இந்தியா டி அணியுடனான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அனந்தபூரில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா சி முதலில் பந்துவீச… இந்தியா டி 164 ரன்னுக்கு சுருண்டது (அக்சர் 86). அடுத்து களமிறங்கிய இந்தியா சி முதல் இன்னிங்சில் 168 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (இந்திரஜித் 72, போரெல் 34). 4 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா டி, மானவ் சுதர் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 236 ரன்னுக்கு ஆட்டமிழந்தது (கேப்டன் ஷ்ரேயாஸ் 54, படிக்கல் 56, ரிக்கி புய் 44, அக்சர் 28).

இந்தியா சி பந்துவீச்சில் மானவ் சுதர் 19.1 ஓவரில் 7 மெய்டன் உள்பட 49 ரன்னுக்கு 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். விஜய்குமார் 2, காம்போஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா சி அணி 61 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபாரமாக வென்றது. ருதுராஜ் 46, சுதர்சன் 22, ஜுயல் 47, பத்திதர் 44 ரன் எடுத்தனர். போரெல் 35, சுதர் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மானவ் சுதர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா சி அணி 6 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post துலீப் கோப்பை கிரிக்கெட்; இந்தியா சி அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Duleep Cup Cricket ,India C ,Anantapur ,Duleep Cup ,India D ,Rudraj Gaekwad ,India ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் பரபரப்பு சமையல் காஸ்...