×

தாந்தோணிமலை அருகே குடும்ப வறுமை காரணமாக பெண் தற்கொலை

 

கரூர், செப். 18: கரூர் தாந்தோணிமலை அருகே குடும்பத் வறுமை காரணமாக குண்டுமணியை அரைத்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் தாந்தோணிமலை பூங்கா நகரைச் சேர்ந்தவர் விமலா(36). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு, அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால், அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள வசதியின்றி விமலா சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த விமலா, விரக்தியடைந்து கடந்த 13ம்தேதி குண்டுமணியை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்த உறவினர்கள் ஆபத்தான நிலையில், கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, உறவினர்கள் புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாந்தோணிமலை அருகே குடும்ப வறுமை காரணமாக பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dandonimalai ,Karur ,Thanthonimalai ,Kundumani ,Vimala ,Thanthonimalai Park, Karur ,Dinakaran ,
× RELATED தாந்தோணிமலை அரசு கல்லூரி முன் அதிக...