×

தகாத உறவை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு சாவு

பெரம்பூர்: சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் ரத்தினம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (38). இவர் அண்ணாநகரில் உள்ள கார் ஷோரூமில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி சந்தியா (30). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது‌. இந்த நிலையில், பாலாஜிக்கு கார் ஷோ ரூமில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டபோது கோபித்து கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இதன்பிறகு நேற்று காலை கணவருக்கு போன் செய்தபோது செல்போனை எடுக்கவில்லை. தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து அவர் நேரில் வந்து பார்த்தபோது வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் பாலாஜி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாலாஜியை மீட்டபோது இறந்துவிட்டது தெரிந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜாமங்கலம் போலீசார் வந்து பாலாஜி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகாத உறவை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு சாவு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Balaji ,Ratnam Street, Villivakkam Rajaji Nagar, Chennai ,Annanagar ,Sandhya ,Dinakaran ,
× RELATED வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த...