×

பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் 8 மாதங்களில் 851 மனுக்கள் மீது தீர்வு

திருச்சி, செப்.12: பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் போலீஸ் கமிஷனர் தலைமையில் கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. மக்களுடன் முதல்வர் முகாம், காவல்துறை இயக்குநர், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் அளித்த புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடந்தது. தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இச்சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் நேரில் வந்து அளித்த 34 மனுக்கள் மீது உரிய தீர்வு காண, சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க தக்க அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் மக்களுடன் முதல்வர் முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் அளித்த 1465 மனுக்கள் பெறப்பட்டு, 1333 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதம் உள்ள 132 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தாண்டு (2024) ஜனவரி மாதம் முதல் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பொதுமக்கள் நேரில் அளித்த 1136 மனுக்களில் 851 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள மனுக்கள் மீது முறையான விசாரணை நடைபெற்று வருகிறது என்று கமிஷனர் காமினி தெரிவித்தார்.இம்முகாமில், போலீஸ் துணை கமிஷனர் தெற்கு மற்றும் வடக்கு, போலீஸ் சரக உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் 8 மாதங்களில் 851 மனுக்கள் மீது தீர்வு appeared first on Dinakaran.

Tags : Public Grievance Redressal Camp ,Trichy ,KK Nagar Armed Forces Community Hall ,Commissioner ,
× RELATED திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்