×

வையம்பட்டி வட்டத்தில் இலவச மின் இணைப்பு: துணை இயக்குநர் ஆய்வு

 

திருச்சி.செப்.13: திருச்சி மாவட்டம் வையம்பட்டி வட்டத்தில் லெட்சம்பட்டி கிராமத்தில் விதைப்பண்ணை, இலவச மின் இணைப்பு குறித்து வேளாண்மை துணை இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம் வையம்பட்டி வட்டாரம் லெட்சம்பட்டி கிராமத்தில் நிலக்கடலை விதை பண்ணை வயலினை வேளாண்மை துணை இயக்குனர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்ட விவசாயிகளின் வயல்களையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் முத்துசாமி, உதவி விதை அலுவலர் தாமஸ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் உடனிருந்தனர்.

The post வையம்பட்டி வட்டத்தில் இலவச மின் இணைப்பு: துணை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vaiyampatti Circle ,Tiruchi.Sep ,Saravanan ,Letsampatti village ,Vayambatti ,Tiruchi district ,Vayambatti district, ,Trichy district… ,Vayambatti district ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது