×

பழையகோட்டை கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

 

திருச்சி, செப்.13: திருச்சி மாவட்டம் வையம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பொன்னுசாமி என்ற விவசாயி தக்கை பூண்டு வயல் அமைத்து பராமரித்து வருவதை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் செயல்பாடுகளை வேளாண்மை இணை இயக்குனர் கண்ணன் (பொ) விரிவாக எடுத்துரைத்தார். ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குனர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் முத்துசாமி, துணை வேளாண்மை அலுவலர் ராஜா சந்திரமோகன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பழையகோட்டை கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Priaikottai Village ,Trichy ,Viyambatti district ,Trichy district ,Ponnusamy ,Praaikottai Village ,Dinakaran ,
× RELATED திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்