×

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

 

திருவெறும்பூர், செப்.17: திருவெறும்பூர் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே துவாக்குடி செடிமலை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளம்பாரதி. இவரது மனைவி சரண்யா. இவருக்கு கடந்த 11 நாட்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களாக குழந்தை தாய்ப்பால் குடிக்காமல் அழுது கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை துவக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதுகுறித்து துவாக்குடி போலீசார் விசாரிக்கிந்றனர்.

The post திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvarumpur ,Duwakudi Sedimalai Murugan Temple Street ,Sarah ,Pachilam ,
× RELATED ‘ஆபரேஷன் அகழி ’யில் கைதான ஐஜேகே...