×

மாணவிகளின் உள்ளாடைகளை திருடும் மர்ம ஆசாமி காட்பாடியில் வைரலாகும் வீடியோ அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ள

வேலூர், செப்.12: காட்பாடியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ள மாணவிகளின் உள்ளாடைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச்ெசல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள மாணவ, மாணவிகள் 4 பேர், 5 பேர் என்று சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். மாணவிகள் தங்கள் ஆடைகளை துவைத்து அடுக்குமாடி குடியிருப்பில் மாடியில் உள்ள கொடியில் காய வைத்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து மாணவிகளின் உள்ளாடைகள் மட்டும் மாயமாகி வந்தது. இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த மாணவிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அதில், இரவு மர்ம ஆசாமி ஒருவர் மாணவிகள் தங்கியிருக்கும் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே செல்கிறார். பின்னர் மாடிப்படி வழியாக மாடியில் ஏறி மாணவிகள் கொடியில் காய வைத்திருந்த உள்ளாடைகளை திருடிக்கொண்டு செல்வது தெரிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காட்பாடி போலீசார் அந்த வீடியோ காட்பாடியில் எடுக்கப்பட்ட வீடியோ தானா, மாணவிகளின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் மர்ம ஆசாமி யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவிகளின் உள்ளாடைகளை திருடும் மர்ம ஆசாமி காட்பாடியில் வைரலாகும் வீடியோ அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ள appeared first on Dinakaran.

Tags : Gadbadi ,Vellore ,Gadpadi ,Katpadi ,
× RELATED குழந்தை திருமணம் செய்து 4 சிறுமிகள்...