×

லாட்ஜில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 15 பேர் கைது அமமுக மாவட்ட செயலாளருக்கு சொந்தமான

குடியாத்தம், செப்.13: குடியாத்தத்தில் அமமுக மாவட்ட செயலாளருக்கு சொந்தமான லாட்ஜில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள், மேலாளர் உட்பட 15 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள அமமுக மாவட்ட செயலாளர் சதீஷ் என்பவரின் லாட்ஜில் ஆந்திரா, கேரளா மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக எஸ்பி அலுவலகத்திற்கு புகார் வந்தது. தொடர்ந்து, எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று இரவு குடியாத்தம் நகரில் உள்ள பல்வேறு லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, குடியாத்தம் பஸ் நிலையம் பின்புறம் அமமுக மாவட்ட செயலாளர் சதீஷுக்கு சொந்தமான லாட்ஜில் பாலியல் ெதாழிலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, லாட்ஜ் மேலாளர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். கைதான 6 பெண்களிடம் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராணி விசாரணை நடத்தி வருகிறார். லாட்ஜ்களில் போலீசார் சோதனை குறித்து தகவலறிந்த மற்ற லாட்ஜ்களில் பாலியல் தொழில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அறைகளை காலி செய்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post லாட்ஜில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 15 பேர் கைது அமமுக மாவட்ட செயலாளருக்கு சொந்தமான appeared first on Dinakaran.

Tags : AMU district ,Kudiatham ,AAMUK District ,Satish ,Gudiyattam Nagar, Vellore District ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுடன் வாக்குவாதம்...