×

ரயிலில் சிக்கி 2 வாலிபர்கள் பலி வேலூர், காட்பாடியில்

வேலூர், செப்.18: வேலூர், காட்பாடியில் ரயிலில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது ஜாகீர்(21). இவர் நேற்று தனது தங்கையுடன் திருப்பதியில் இருந்து மன்னார்குடி செல்லும் பாமனி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். வேலூர் கன்டோன்மெண்ட் அருகே ரயில் வந்தபோது முகமது ஜாகீர் திடீரென நிலை தடுமாறி ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய உடல் இரு துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதேபோல், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தீப்கிருஷ்ணன்(31). இவர் பாலக்காட்டில் இருந்து சம்பல்பூர் செல்ல தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்தார். நேற்றிரவு காட்பாடி ரயில் நிலையத்தில் 2வது பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றது. டீ சாப்பிடுவதற்கு சந்தீப்கிருஷ்ணன் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டது. இதனால் ரயிலை பிடிக்க ஒடியபோது, சந்தீப்கிருஷ்ணன் தண்டவாளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவங்கள் குறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ரயில்வே போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயிலில் சிக்கி 2 வாலிபர்கள் பலி வேலூர், காட்பாடியில் appeared first on Dinakaran.

Tags : Vellore, Katpadi ,Vellore ,Gadpadi, Vellore ,Mohammad Zakir ,Andhra state ,Tirupati ,Mannargudi ,Bamani Express ,Vellore Cantonment… ,Dinakaran ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்...