சங்கரன்கோவில், செப்.12: பாளையங்கோட்டை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் கீழ் இயங்கும் சமூக சேவை மையம் சார்பில் சங்கரன்கோவிலில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த உடல் நல சேவை மையம் துவக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை இயக்குனர் அருள்ராஜ் வரவேற்றார். பாளை மறைமாவட்ட செயலக முதல்வர் ஞானப்பிரகாசம் புதிய சேவை மையத்தை துவக்கி வைத்தார். இதில் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி, மருதையா, கோயில்பிள்ளை, சமூக சேவை மைய செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், அனைத்து கிறிஸ்தவ சபை தலைவர் தம்பி சேவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ஆர்சி பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மருத்துவர் சந்திரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆர்சி பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
The post சங்கரன்கோவிலில் உடல் நல சேவை மையம் திறப்பு appeared first on Dinakaran.