உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

கேதார்நாத்: கேதாா்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. உத்தரகாண்ட் மாநிலம் சோன்பிரயாகை – கெளரிகுண்ட் இடையே நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நடைபயணமாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் சிக்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய-மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்புப் பணியில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மோசமான வானிலை காரணமாக இரவில் நிறுத்தப்பட்ட மீட்புப் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. அப்போது, மேலும் 4 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ருத்ரபிரயாகை காவல்துறை கண்காணிப்பாளர் அக்ஷய் கோண்டே தெரிவித்தார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இன்றைய நிலையில் கேதார்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

The post உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: