* அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முன்தினம், நந்தவனம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி மற்றும் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மார்க்ரேட் மேரி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநில வர்த்தகர் அணி செயலாளர் ஜெயன், மாநகர துணைச் செயலாளர் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜாமணி சுந்தர்ராஜன், தாமரைச்செல்வி, முன்னாள் எம்எல்ஏ காளியப்பன், பொருளாளர் விஜயன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பொன்ராஜ், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக திண்டுக்கல் மாநகரச் செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா வரவேற்புரை ஆற்றினார்.கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான அர.சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்தி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, பேசுகையில்: திண்டுக்கல் என்றாலே எம்.ஜி.ஆர் என்ற நிலைமை மாறி தற்போது ஸ்டாலின் தான் என்ற நிலையை நாம் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். தமிழகத்திற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையிலும் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்து திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர். இந்தியாவில் இது போன்ற முதல்வர் வேறு யாரும் கிடையாது. திமுக என்பது சர்வ சாமானியர்களின் இயக்கம் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என பல திட்டங்களை நமது தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். எனவே அரசின் சாதனைகளை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும். திராவிட மாடல் அரசு பெண்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒரு அரசாக செயல்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவகுருசாமி, வெள்ளிமலை, நெடுஞ்செழியன், கொடைக்கானல் நகர் செயலாளர் முகமது இப்ராஹிம், ஒட்டன்சத்திரம் நகர் செயலாளர் வெள்ளைச்சாமி, பழநி நகர செயலாளர் வேலுமணி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாஷா, மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், கலைராஜா, மாநகர பொருளாளர் மீடியா சரவணன், மண்டல தலைவர்கள் ஆனந்த், ஜான் பீட்டர், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ரகுமான், மாவட்ட இளைஞர் அணி கணேசன், மாணவரணி அமைப்பாளர் அஸ்வின், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா, அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக பகுதி கழக செயலாளர் ஜானகிராமன் நன்றி தெரிவித்தார்.
The post திண்டுக்கல் என்றாலே ஸ்டாலின் தான் appeared first on Dinakaran.