×

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் கைது

 

திருச்சி, செப்.6: திருச்சியில் போலி பாஸ்போர்ட் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ்.மங்கலம் அனந்தூர் ஆயிஷா நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது(37). இவர் கடந்த 3ம் தேதி இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்தார்.

அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தந்தை பெயர், முகவரியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் சாகுல் ஹமீதை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Trichy ,Chakul Hameed ,Aisha Nagar ,RS Mangalam Anandur ,Ramanathapuram District ,Trichy Airport ,Kuala Lumpur ,
× RELATED சிவகளை தொல்லியல் களத்தின் பழமை: வெளிநாட்டினர் பார்த்து வியப்பு