இதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் எரிசக்தி மற்றும் சிறை துறை அமைச்சர் ரஞ்சித் சவுதாலாவுக்கும் பாஜ மேலிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கவில்லை. இதனை தொடர்ந்து ரஞ்சித் சவுதாலா சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். தனது ஆதரவாளர்களிடம் பேசிய பின்னர் அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இது குறித்து ரஞ்சித் கூறுகையில்,‘‘நான் சவுத்ரி தேவி லாலின் மகன். எனக்கென ஒரு அந்தஸ்து இருக்கிறது. நான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளேன்” என்றார். அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
The post தேர்தலில் சீட் மறுப்பு அரியானாவில் அமைச்சர், எம்எல்ஏ பாஜவில் இருந்து விலகல் appeared first on Dinakaran.