வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தம் திருடிய 4 பேர் கைது

தாம்பரம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தங்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாத்து வைத்திருந்த யானை தந்தங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திருடுபோனது. தமிழ்நாடு வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பிரிவினரும், தாம்பரம் வனச்சரக அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் 4 பேரை பிடித்து விசாரித்தபோது யானை தந்தங்கள் திருடியது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிய ஊழியர் அப்பு (எ) சதீஷ் என்பது தெரியவந்தது. இவருடன் மேலும் 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த திருட்டு 2 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களது கூட்டாளிகளை கைது செய்து விசாரித்தால்தான் முழுவிவரம் தெரியவரும். உயிரியல் பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தம் திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: