ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

திருக்காட்டுப்பள்ளி, செப். 5: திருக்காட்டுப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவையாறு டிஎஸ்பி (பொ) முருகதாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விநாயகர் சிலைகள் காவல் துறையினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலை நிறுவிய 3 நாட்களுக்குள் கரைத்து விட வேண்டும். விநாயகர் சிலை உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தை குறிப்பிட்டு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அனுமதியை பெறப்பட வேண்டும் உள்ளிட்ட பல விபரங்களை தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு, மின்சாரம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி துறையினருடன் இணைந்து சிலை உர்வலத்தினை எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். விழா குழுவினர் காவல் துறையினருக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து கட்டுப்பாடுடன் நடந்து கொண்டு எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். கூட்டத்தில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஷர்மிளா, திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், பூதலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார், திருவையாறு சுற்றுவட்டார பகுதி மக்கள் பொதுமக்களும், பக்தர்களும், முக்கியஸ்தர்களும்,விழா குழுவினரும் கலந்து கொண்டனர் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு டிஎஸ்பி முருகதாசன் தலைமையில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

The post ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: