அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக அமெரிக்காவில் உள் நுழைந்ததாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரி – ஜூன் காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரிப்பதால் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

The post அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: