தஞ்சாவூர், செப்.3: தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கார தெரு பகுதியை சேர்ந்த மாணவி சத்தியா தாய், தந்தை உயிரிழந்ததால் வருமானத்திற்கும், படிப்பதற்கும் வழிவகை செய்யக்கோரி நேற்று கலெக்டரிடம் மனுஅளித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கார தெரு பகுதியை சேர்ந்த மாணவி சத்தியா மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது:எங்களது தந்தை மெய்யழகன் (எ) லட்சுணன், தாய் மல்லிகா ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி ஒரே நேரத்தில் இறந்து விட்டனர்.
நான் சத்திய 8ம் வகுப்பு, தங்கை லாவண்யா 7ம் வகுப்பு, தம்பி சந்துரு 6ம் வகுப்பு படித்து வருகிறோம். எந்த வித ஆதரவும் வருமானமும் இன்றி மிகவும் சிரமமான சூழ்நிலையில் எங்களது பாட்டி அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றோம். எனது பாட்டி கூலி தொழில் செய்து வருகிறார். எனவே மாவட்ட கலெக்டர் எங்களின் மேல் படிப்புக்கும், வருமானத்திற்கும் வழிவகை செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆதரவு இல்லாததால் படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் பெற்றோரை இழந்த மாணவி கோரிக்கை appeared first on Dinakaran.