அதிமுக நிர்வாகி மகன் ெகாலை வழக்கு போலீசாரிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வாலிபர்: கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி

மன்னார்குடி: மன்னார்குடி அதிமுக நிர்வாகி மகன் கொலை வழக்கில் சிக்கிய வாலிபர் போலீசாரிடமிருந்து தப்ப ஆற்றில் குதித்தபோது கால் முறிந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தென்வடல் காகிதபட்டறை தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். அதிமுக வார்டு செயலாளர். இவரது மனைவி சத்யா. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர். இவர்களது மகன் ஜெயநாராயணன்(38). எலக்ட்ரீசியனான இவர், கடந்த 31ம்தேதி நள்ளிரவு பந்தலடி வழியாக வீட்டுக்கு சென்றபோது அப்பகுதியில் மது அருந்திய சிலருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ரீப்பர் கட்டையால் தலையில் தாக்கி முகத்தில் பாறாங்கல்லை தூக்கி போட்டு ெஜயநாராயணன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அரிசி கடை தெருவை சேர்ந்த நம்பிராஜன்(30), நெடுவாக்கோட்டையை சேர்ந்த பீர்முகமது(34) ஆகியோரை மன்னார்குடி டவுன் போலீசார் தேடி வந்த நிலையில், மன்னை நகர் பாமணி ஆற்றங்கரையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

நேற்றுமுன்தினம் இரவு அங்கு சென்ற போது பாமணி ஆற்று பாலம் அருகில் நின்றிருந்த நம்பிராஜன் போலீசாரை பார்த்ததும் தப்பிக்க பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார். இதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து பீர்முகமது, நம்பிராஜனை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த நம்பிராஜன் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நம்பிராஜன் மீது மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் அடிதடி, வழிபறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post அதிமுக நிர்வாகி மகன் ெகாலை வழக்கு போலீசாரிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வாலிபர்: கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: