சாத்தூர் பகுதியில் சிறுபாசன கண்மாய்கள் தூர்வாரப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

சாத்தூர்: சாத்தூர் பகுதியில் உள்ள சிறுபாசன கண்மாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் பகுதியில் அதிகளவில் கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன. நூறு ஏக்கருக்கு மேல் பாசன வசதி கொண்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழும், அதற்கு கீழ் பாசனம் உள்ள சிறுகண்மாய்கள் மற்றும் ஊரணிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பராமரிப்பிலும் இருந்து வருகிறது.

அதேநேரத்தில் சிறுபாசன கண்மாய்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இராமலிங்காபுரம், வேண்டாங்குளம், நீராவிபட்டி ஆகிய கண்மாய்கள் குடிமரமரத்து செய்ய கடந்த அதிமுக ஆட்சியின் போது பல லட்சங்கள் ஒதுக்கீடு செய்து பணிகள் பெயரளவில் நடந்தன. பணிகள் முறையாக நடைபெறாததால் ஆக்கிரமிப்புகளால் கண்மாய்கள் மேடாகி வருகின்றன. இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, இவற்றை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாத்தூர் பகுதியில் சிறுபாசன கண்மாய்கள் தூர்வாரப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: