பூம்பிடாகை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஓராண்டாக ஆசிரியர்கள் இல்லை: 5ம் வகுப்பு மாணவர்களே பாடம் கற்பிக்கும் பரிதாபம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளியில்  கடந்த ஒரு வருடமாக ஆசிரியர்களே இல்லாததால் மாணவர்கள் தாங்களாகவே கற்கும் அவலநிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அருப்புக்கோட்டை நரிக்குடி அருகே உள்ள பூம்பிடாகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கொரோனாவால் கல்வி நிலையங்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டிருந்தபோது இப்பள்ளியின் தலைமையாசிரியர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்பள்ளியில் பணிபுரிந்த மற்றொரு ஆசிரியரும் ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிக்கு வரவில்லை என தெரிகிறது.  இருப்பினும், ஆசிரியர் வராவிட்டாலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் பள்ளி வருவதை நிறுத்தவில்லை. தாங்களாக மாணவர்கள் கல்வி கற்கும் நிலை தொடர்கிறது. ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி செயல்பட்டு வருவதை அறிந்த கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் சிலர் அவ்வப்போது அந்த அப்பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த இளைஞர்களும் வராத சமயத்தில் 5 ஆம் வகுப்பு மாணவிகளே அனைத்து குழந்தைகளுக்கும் பாடம் வருகின்றனர். ஆசிரியர்கள் இல்லாததால் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் ஆடு மேய்க்கவும், வீடு வேலைகளை செய்யும் நிலை உள்ளது. எனவே, இப்பள்ளி குழந்தைகளின் எதிர்காலம் கருதி  பூம்பிடாகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு உடனடியாக புதிய ஆசிரியரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.               …

The post பூம்பிடாகை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஓராண்டாக ஆசிரியர்கள் இல்லை: 5ம் வகுப்பு மாணவர்களே பாடம் கற்பிக்கும் பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: