கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் நோக்கி சரக்கு கப்பல் எம்விஐஐடி சென்று கொண்டு இருந்தது. மோசமான வானிலை காரணமாக சாகர் தீவுக்கு தெற்கே 70 நாட்டிகல் மைல் தூரத்தில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. சாகர் கப்பல் கண்காணிப்பு அமைப்பின் மூலமாக ஹால்டியா கடலோர காவல்படைக்கு சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது குறித்த தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படையின் டோர்னியர் விமானம் மூலமாக சரக்கு கப்பல் மூழ்கிய இடம் கண்டறியப்பட்டது. பின்ன்ர் இந்திய கடலோர காவல்படையின் சாரங் மற்றும் அமாக் கப்பல்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. இதில் 11 ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.
The post கொல்கத்தா அருகே சரக்கு கப்பல் மூழ்கியது: 11 ஊழியர்கள் மீட்பு appeared first on Dinakaran.