சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.450 உயர்ந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. வட மாநிலங்களில் பூண்டு விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைந்துள்ளது; அதன் எதிரொலியாக விலை அதிகரித்துள்ளது. 100 டன் வரவேண்டிய சந்தைக்கு, தற்போது 20 டன் அளவு மட்டுமே பூண்டு வருகிறது. ஒரு கிலோ நீலகிரி மலை பூண்டு ரூ. 350 – ரூ.500 வரை விற்பனை மந்தமாகிவிட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
The post சேலம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைவால் பூண்டு விலை ரூ.450 உயர்வு..!! appeared first on Dinakaran.