வௌிநாட்டில் பணிக்கு சென்ற காலத்தையும் சர்வீஸ் கணக்கில் சேர்க்க வேண்டும்: பேராசிரியர் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராக்கியப்பன் கடந்த 2011ல் உதவி பேராசிரியராக சேர்ந்தார். கொரியாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுவதற்காக அவருக்கு அழைப்பு வந்தது. பாரதியார் பல்கலைக்கழகத்திடம் ராக்கியப்பன் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்.

அவர் கொரியாவில் பணியாற்ற 2017 ஏப்ரல் முதல் 2018 ஏப்ரல் வரை ஓராண்டு அனுமதி அளித்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. உத்தரவில் கொரியாவில் பணியாற்றும் காலம் அவரது சர்வீஸ் காலத்தில் சேர்க்கப்படாது. அந்த காலம் விடுப்பு எடுத்ததாகவே கருதப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, .இதை சர்வீஸ் காலத்துடன் சேர்க்க கோரி உயர் நீதிமன்றத்தில் ராக்கியப்பன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஒரு ஆண்டு கொரியாவில் ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவர் ஓய்வூதிய பலன்களை பெறுவதற்காக அந்த பணிக்காலத்தை அவரது சர்வீஸ் காலத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

The post வௌிநாட்டில் பணிக்கு சென்ற காலத்தையும் சர்வீஸ் கணக்கில் சேர்க்க வேண்டும்: பேராசிரியர் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: