சாத்தான்குளம் அருகே அனுமதி இன்றி குண்டு கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

சாத்தான்குளம், ஆக.23: சாத்தான்குளம் அருகே அனுமதி இன்றி குண்டு கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் 7 யூனிட் குண்டுகல்லை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர். சாத்தான்குளம் பகுதியில் அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மணல், குண்டுகற்கள் கொண்டு செல்லப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி, விஏஓ ஜெஸ்மின் மேரி, வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பண்டாரபுரம் நாராயணசாமி கோயில் அருகே வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் எந்தவித அனுமதியும் இன்றி குண்டு கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அப்போது டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். வருவாய்த்துறையினர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விஏஓ ஜெஸ்மின் மேரி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ எட்வின் அருள்ராஜ் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி மற்றும் 7 யூனிட் குண்டு கற்களை பறிமுதல் செய்து தலைமறைவான லாரி உரிமையாளர், டிரைவரை தேடி வருகிறார்.

The post சாத்தான்குளம் அருகே அனுமதி இன்றி குண்டு கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: