கள்ளக்காம்பட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் 983 மனுக்கள் பெறப்பட்டன

 

துவரங்குறிச்சி, ஆக.22: மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடமிருந்து 983 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டியில் சேவை மைய வளாகம் முன் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழ்நாடு மின்வாரியத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மற்றும் வருவாய் துறை, காவல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை, மற்றும் மகளிர் உரிமைத் தொகை, வாழ்வாதார கடன் உதவிகள், மகளிர் சுய உதவிக் குழு, கால்நடை பராமரிப்பு பால்வளத்துறை மற்றும் மீன்வள மீனவர் நலத்துறை ஆகிய அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை அவர்களிடமே சென்று பெற்று, அதற்கு தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் அடைக்கம்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி ஆகிய 5 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் 983 மனுக்கள் அளித்தனர். முன்னதாக நிகழ்ச்சியினை மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னடைக்கண், தனி தாசில்தார் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாச பெருமாள், நிர்மல, கள்ளக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் சிவனேசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

The post கள்ளக்காம்பட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் 983 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: