நெருக்கடி காலங்களில் நிச்சயம் உதவும்

நமக்கு எவ்வளவு தின, வார, மாத வருமானம் இருந்தாலும் அதில் சேமித்தே ஆக வேண்டும். இதையொட்டியே அவரவர் வாழ்க்கைத் தரத்தை நெருக்கடி காலத்தில் சமாளிக்க முடியும். இன்றைய ஐடி துறையினர் உட்பட பலர் நாளை என்ற திட்டமிடலை விட்டு முழுமையையும் செலவழித்து வருகிறார்கள். ஆனால் 20 சதவீத சேமிப்பு அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். குறைந்தது 10 சதவீதமாவது சேமிக்க வேண்டும்.

ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் தவறினாலும் அடுத்த நாளில், வாரத்தில், மாதத்தில் முடிந்தவரை சரிகட்டி விட வேண்டும். துணி தேய்ப்பவர் தினமும் ரூ.1500, பண்டிகை நாட்களில் ரூ.2500, ரூ.3000 வரை சம்பாதிக்கிறார். தின, வாரக்கூலி என்பதால் வரியும் கட்டுவதில்லை. கொரோனா சமயத்தில், பணி இழப்பு காரணமாக இவரால் ஒரு வாரம் கூடச் சமாளிக்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கும். அவர் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் வேலை செய்கிறாரோ அந்த அளவுக்கு வருமானம் கூடும்.

ஆனால், தற்போது பணம் இல்லாமல் அலைந்து திரிகிறார். காரணம் என்ன தெரியுமா? அவரிடம் சேமிப்பில்லாதது மட்டும்தான்.  இவர் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட சதவீத ஊதியத்தைச் சேமித்து இருந்தால், அவர் அடைந்த மோசமான நிலையைத் தவிர்த்து இருக்கலாம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோலவே அவரவர் நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக சொன்னால் நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், சிறு சேமிப்பு அவசியம். இதுவே நம்முடைய நெருக்கடி காலங்களில் உதவும்.

* சீட்டினால் ஏற்படக்கூடிய சேமிப்பு பயன்கள் என்ன?
மாதா மாதம் கட்டாய சேமிப்பு நடப்பதால் ஈவுத்தொகை கிடைக்கும். கடைசி மாதத்தில் எடுத்தால் கூட ஈவுத்தொகை வங்கியின் வட்டியை விட அதிகமாக கிடைக்கும்.

விதிமுறைகள்

* வசிப்பிடத்துடன் கூடிய அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

* வாடிக்கையாளர்கள் தங்களுது சந்தா தொகையை தினசரியோ வாராந்திரமாகவோ மாதாந்திரமாகவோ செலுத்தலாம்.

* வாடிக்கையாளர்களுக்கு மூன்றாவது தவணை செலுத்திய பிறகு இன்சூரன்ஸ் செய்து தரப்படும்.

The post நெருக்கடி காலங்களில் நிச்சயம் உதவும் appeared first on Dinakaran.

Related Stories: