×

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 765 சிறப்பு பேருந்துகள்

தாம்பரம், ஆக.18: இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 18ம் தேதி 130 பேருந்துகளும், 19ம் தேதி 250 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து 18ம் தேதி 30 பேருந்துகளும், 19ம் தேதி மாதாவரத்திலிருந்து தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 19ம் தேதி 265 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். இதுதவிர, அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 19ம் தேதி இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 765 சிறப்பு பேருந்துகள் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Poornami ,Tambaram ,Transport Department ,Chennai ,full ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர...