×

செங்கல்பட்டு அருகே பைக் மரத்தில் மோதி வாலிபர் பலி

 

செங்கல்பட்டு, செப்.11: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் ஜெரினோ (30). இவர், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், நேற்று இரவு செட்டிப்புண்ணியம் அரசு பள்ளி அருகில் உள்ள தனது உயிர் நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

இவர் இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, செட்டிபுண்ணியம் – சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் செட்டி புண்ணியம் ஏரி அருகே சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரம் இருந்த கருவேல மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில், படுகாயம் அடைந்த கிங்ஸ்டன் ஜெரினோவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்பு, விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செட்டிபுண்ணியம் அருகே மரத்தின் மீது மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post செங்கல்பட்டு அருகே பைக் மரத்தில் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Kingston ,Gerino ,Chettipunniam ,Singaperumalko, Chengalpattu district ,Chettipunnyam Government School ,
× RELATED அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு