×

திறப்பு விழாவுக்கு முன்னதாகவே பரனூர் சுங்கச்சாவடி கழிப்பறை ஜன்னல் கண்ணாடிகள் சேதம்: சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

 

செங்கல்பட்டு, செப்.10: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருமார்க்கத்திலும் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும், பயணிகள் இங்கு பேருந்துக்காகவும் கத்திருந்து செல்வது வழக்கம். இந்த சுங்கச்சாவடியில் கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயணிகள் கோரிக்கையை தொடர்ந்து தற்காலிக கழிப்பறை வைக்கப்பட்டு முறையாக பராமரிக்காமல் விட்டதால் துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வருகின்றது.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் கழிப்பறை தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் திறப்பு விழாவுக்கு முன்னே கழிப்பறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, உடைந்துள்ள ஜன்னல்களை சரி செய்து கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பயணிகளும், வாகன ஓட்டிகளும் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திறப்பு விழாவுக்கு முன்னதாகவே பரனூர் சுங்கச்சாவடி கழிப்பறை ஜன்னல் கண்ணாடிகள் சேதம்: சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Paranur toll ,Chengalpattu ,Chennai – ,Trichy National Highway ,Paranur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – ஆத்தூர் சுங்கச்சாவடி...