×

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே பேருந்து பழுதானதால் போக்குவரத்து நெரிசல்

 

செங்கல்பட்டு, செப்.11: செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டில் இருந்து பொன்விளைந்த களத்தூர் வரை அரசு பேருந்து தடம் எண் 29சி செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது, திடீரென பழுதாகி நின்றது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர், மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனையில் இருந்து வந்த ஊழியர்கள் பழுதாகி நின்றுக்கொண்டிருந்த பேருந்து சரி செய்த பிறகு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே திடீரென அரசு பேருந்து பழுதாகி நின்றதால் செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும் அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதாகி ஆங்காங்கே நிற்பதால் பேருந்தில் பயணம் செய்து வரும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என குறித்த நேரத்திற்க்கு செல்ல முடியாத நிலை உருவாகுகின்றது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் சரியான முறையில் இயங்கும் அரசு பேருந்துகளை மட்டும் பயணிகளை ஏற்றி செல்ல அனுப்பி வைக்க வேண்டும் பயணிகள் கேட்டு கொள்கின்றனர்.

The post செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே பேருந்து பழுதானதால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu court ,Chengalpattu ,Ponvilinda Kalathur ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு