ஏ.டி.எம்.டி.பரிபூரணம், மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் உடல்நலம் குன்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20.11.2022 அன்று இயற்கை எய்தினார். ஏ.எம்.டி.பரிபூரணம் மகளும், மொழிஞாயிறு தேவநேய பாவாணர் கொள்ளு பேத்தியுமான க.மனோசாந்தி, கருணை அடிப்படையில் தமக்கு பணி நியமனம் கோரி முதல்வருக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.
முதல்வர், தேவநேய பாவாணர் வாரிசுதாரர் க.மனோசாந்தி விண்ணப்பித்தினை ஏற்று, பரிவுடன் பரிசீலித்து, அவருக்கு மதுரை மாவட்ட மொழிஞாயிறு தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தில் கருணை அடிப்படையில், பணி நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார். இந்த ஆணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பாவாணர் கொள்ளுப்பேத்தி க.மனோசாந்திக்கு நேற்று வழங்கினார். இந்நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் செல்வராஜ், அன்புச்சோழன், ஆகியோர் உடனிருந்தனர்.
The post பாவாணர் கொள்ளுப்பேத்தி மனோசாந்திக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.