ஊர்க்காவல் படை டிஜிபி வன்னிய பெருமாள், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மொடக், சென்னை பெருநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராக உள்ள கண்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஐஜி ஏ.ஜி.பாபு, சேலம் மாநகர கமிஷனர் பிரவீன் குமார் அபினாபு, கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பிரபாகர், தமிழ்நாடு போலீஸ் அகாடமி (பயிற்சி) துணை இயக்குநர் சுரேஷ்குமார், சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி கிங்ஸ்லின், சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி சியாமளா தேவி, கோவை மண்டல சிவில் சப்ளை சிஐடி எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் கூடுதல் எஸ்பிக்கான வேலூர் காவர் பயிற்சி பள்ளி கூடுதல் எஸ்பி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அதிதீவிரப்படை கூடுதல் எஸ்பி ஸ்டீபன், பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட டிஎஸ்பி டில்லிபாபு, திருநெல்வேலி மாவட்ட சிறப்பு புலனாய்வுப்பிரிவு டிஎஸ்பி மனோகரன், சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் டிஎஸ்பி சங்கு, கோவை க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் ஹரிபாபு, திருவாரூர் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, சென்னை பாதுகாப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சென்னை பெருநகர நுண்ணறிவுப் பிரிவு எஸ்ஐ முரளி, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்ஐ ரவிச்சந்திரன், தாம்பரம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் முரளிதரன் ஆகியோருக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
The post மெச்சத்தக்க சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த 23 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.