சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு..!!

டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரின் விருதுகளானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் விருது என்பது வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டு முறை அறிவிக்கப்படும். இந்த நிலையில் இன்று காவல்துறை, தீயணைப்பு படை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட சீர்திருத்த சேவைகளில் சிறப்பாக பணியாற்றிய 1307 காவல்படை வீரர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிறப்பு மிக்க சேவையாற்றியதற்காக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 91 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீர தீர செயலுக்கான விருது தெலங்கானாவை சேர்ந்த தலைமைக் காவலர் சதுவு எடையாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 213 வீர பதக்கங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 52 பதக்கங்கள் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 26 பேர் இந்த முறை குடியரசு தலைவரின் வீர தீர செயலுக்கான விருதை பெற உள்ளனர். வன்னிய பெருமாள், அபின் தினேஷ் மோடாக்கிற்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது. மத்திய உள்துறைக்கான சிறப்பு விருது தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பெனி கமாண்டர் மூர்த்தி, பிளாட்டூர் கமாண்டர் 3 கலையழகன், ஏரியா கமாண்டர் பிளாட்பினுக்கு உள்துறை. திறம்பட சேவையாற்றியதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேருக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதில், ஐஜி கண்ணன், ஐஜி பாபு, ஆணையர் பிரவீன்குமார் அபினபு, எஸ்பி ஃபெரோஸ்கான்,எஸ்.பி.க்கள் சுரேஷ்குமார், கிங்ஸ்லின், ஷியாமளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன், ஏஎஸ்பிக்கள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன், டிஎஸ்பிக்கள் டில்லி பாபு , மனோகரன், ஆய்வாளர்கள் சந்திரசேகர், சந்திரமோஜன், ஹரிபாபு, தமிழ்ச்செல்வி மற்றும் 3 எஸ்ஐக்கள் உள்ளிட்டோருக்கு அதிகாரபூர்வமாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: