திருப்பூர்: பல்லடம் அருகே பிரபல ரவுடி வினோத் கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸ் கைது செய்தது. ரவுடி வினோத் கண்ணன் கொலை ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதிஷ்குமார் (22), காளீஸ்வரன் (25), பிரபுதேவா (32), சாமிநாதன் (52) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை ஆவரங்காட்டை சேர்ந்த அஜய் தேவன், திருச்செந்தூரை சேர்ந்த சுரேஷ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த அக்னிராஜின் தந்தை தங்கமணியையும் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. பல்லடம் அருகே கரையான்புதூரில் காரில் துரத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல், வினோத் கண்ணனை கொலை செய்தது. சட்டக்கல்லூரி மாணவரான அக்னிராஜ் 2021 ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் 9ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அக்னிராஜை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர்.
அக்னிராஜ் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என இன்ஸ்டாகிராமில் அவரது நண்பர்கள் “அக்னி பிரதர்ஸ்” என ஒரு குழுவை தொடங்கினர். இன்ஸ்டா குழு மூலம் தகவல் பரிமாறி, அக்னிராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஷ், அழகுபாண்டியை அடுத்தடுத்து கொன்றனர். அக்னிராஜ் கொலை வழக்கில் வினோத் கண்ணன் சேர்க்கப்படாத நிலையில், கொலைக்கு அவரும் காரணம் என அக்னி பிரதர்ஸ் குழு நம்பியது. அக்னிராஜ் கொலை வழக்கில் பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், தர்மராஜ் கைதாகி ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக உள்ளனர்.
The post அடுத்தடுத்து சிக்கிய அக்னி பிரதர்ஸ் கும்பல்: பல்லடம் ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.