சிவகங்கை, ஆக.13: சிவகங்கையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும், ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.
வேலை இடத்தில் விபத்தில் மரணமடையும் தொழிலாளர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், இ.கம்யூ மாவட்ட செயலாளர் சாத்தையா, மாநில பொருளாளர் முருகன், மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சிவசாமி, மாவட்ட பொருளாளர் மனோகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பு, ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் சகாயம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.