தஞ்சாவூர், ஆக. 12: தஞ்சை தூய இதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1960ம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவிகள் ஒன்று இணைந்த ‘சங்கமம் விழா’ நடைபெற்றது. ஒவ்வொருவரும் தங்கள் படித்த காலங்களில் நடந்த இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்
தஞ்சையில் மிகவும் பழமையான புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்றான தூய இதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1960ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை படித்த மாணவிகள் வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர் என பல்வேறு நிலைகளில் உள்ளனர். ஒரு சிலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
இவர்கள், அனைவரும் தாங்கள் படித்த பள்ளியில் ஒன்று கூடல் நிகழ்வு நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நடைபெற்ற நிகழ்ச்சியில், 1960 முதல் 2023 வரை கடந்த 63 ஆண்டுகளாக இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் ஒன்று கூடினர்.அப்போது, ஒருவரையொாருவர் தங்களை அடையாளப்படுத்தி கொண்டு, ஆச்சரியத்தில் ஆர தழுவி கட்டி கொண்டனர். பின்னர், தாங்கள் படித்த காலக்கட்டங்களில் நடந்த சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியைகளுக்கு மரியாதை செய்தனர்.. மேலும், பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கினார்கள்.
The post தஞ்சை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1960 முதல் 2023 வரை படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு appeared first on Dinakaran.