தஞ்சாவூரில் இ.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், ஆக. 10: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சந்திரகுமார், சேவையா, பக்கிரிசாமி, கண்ணகி, கலியபெருமாள்,

கோவிந்தராசு, திருநாவுக்கரசு இசைக்குழு செயலாளர்கள் பூபேஷ்குப்தா, வாசு. இளையராஜா, முத்துக்குமரன், பால்ராசு, குணசேகரன், வீரமணி, தட்சிணாமூர்த்தி, முத்துராமன், சுதாகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, காரல் மார்க்ஸ், கோவிந்தராசு, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், சமஸ்கிருத மொழியிலான மூன்று குற்றவியல் சட்டங்களையும், மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு எதிரான காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கின்ற இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

The post தஞ்சாவூரில் இ.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: