நாமக்கல், ஆக.10: சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டுமென நாடாளுமன்றத்தில் நாமக்கல் மாதேஸ்வரன் எம்பி கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர், நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசுகையில், தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் கமலாபுரத்தில், விமான நிலையம் அமைந்துள்ளது. சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதற்கு அரசு திட்டமிட்டுள்ளதா?. அதற்கான காலக்கெடு எதுவும் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு பதிலளித்து பேசுகையில், ‘சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஏடிஆர்-72 வகை விமானங்களுக்கு, முதல் கட்டமாக சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்த, மாநில அரசிடமிருந்து 177 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது,’ என்றார்.
The post சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் appeared first on Dinakaran.