மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி

 

தர்மபுரி, ஆக.10: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி வரும் 1ம்தேதி நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தடகள கழக தலைவர் சரவணன், செயலாளர் அறிவு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட அளவில் இளையோர் தடகள போட்டிகள், வரும் செப்டம்பர் 1ம்தேதி காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள் வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை, ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். 14, 16, 18, 20 வயது உட்பட்ட நான்கு பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வரும் 1ம்தேதி காலை 6 மணிக்கு போட்டி தொடங்கும் தொடங்குவதற்கு முன்பாக நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்தி பதிவு எண் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு போட்டியாளர் 2 போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 9442207047 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி appeared first on Dinakaran.

Related Stories: