நடுவீரப்பட்டு அருகே கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது 1 கிலோ பறிமுதல்

நெல்லிக்குப்பம், ஆக. 10:நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் நடுவீரப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார். நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரம் ஏரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக கார் மற்றும் பைக் நின்றிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சென்று, அங்கு நின்றிருந்த ஐந்து பேரிடம் விசாரணை செய்தனர். அதில், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் கார் மற்றும் பைக்கை சோதனை செய்தனர்.

அதில், 1 கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த தனுஷ் மகன் சாய் குமார் (24), சிவமணி மகன் பிரபு (31), கே.என் பேட்டை ராஜ்குமார் மகன் ராம்ராஜ் என்ற ராஜேஷ் (45), முருகன் மகன் கவியரசன் (20), கடலூர் வண்டிப்பாளையம் பிரபு மகன் ரவிச்சந்திரன் (23) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், கார் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

The post நடுவீரப்பட்டு அருகே கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது 1 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: