சென்னை: தமிழ்நாட்டில் 24 காவல் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.மணிகண்டன், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், குத்தாலிங்கம், விஜயகுமார், கார்த்திகேயனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், இனிகோ திவ்யன், எஸ்.அசோக்குமார், ஏ.அருண், டி.தேவநாதனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
கே.முத்துக்குமார், டி.ஈஸ்வரன், வி.கோமதி, எம்.மீனாட்சி, ஏ.வேல்முருகன், ஏ.முத்தமிழ்,ஜரீனா பேகத்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஆர்.ரமேஷ் கண்ணன், பி.கீதா, கே.மகேஸ்வரி, ஆர்.ராஜேஸ்வரி, ஏ.கனகேஸ்வரிக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தியாகராயர் நகர் துணை ஆணையராக குத்தாலிங்கம், புளியந்தோப்பு துணை ஆணையராக முத்துக்குமார் நியமனம் செய்துள்ளனர். தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராக கார்த்திகேயன், நெல்லை கிழக்கு துணைஆணையராக விஜயகுமார் நியமனம் செய்துள்ளார்.
The post 24 காவல் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.