மொடக்குறிச்சி, ஆக.8: கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மொடக்குறிச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அவரது படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி பேரூர் செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் செல்வம்பாள் சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகேயன், பேரூர் துணைச் செயலாளர் தன.வெங்கடேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், ஞானசுப்ரமணி, தனலட்சுமி பழனிச்சாமி, மகல்யா ஆனந்த், ஜெயலட்சுமி பாபு, சித்ராதேவி, காந்திமதி ரவிச்சந்திரன், செல்வி இளங்கோ, கண்ணுச்சாமி நிர்வாகிகள் ஆட்டோ வேலுச்சாமி, ஆட்டோ சிவா, ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
The post மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் சார்பில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.