பேச்சிப்பாறையில் அமைந்துள்ள தேனீ மகத்துவ மையத்தில் இஸ்ரேல் அதிகாரி ஆய்வு

நாகர்கோவில், ஆக. 8: குமரி மாவட்டம் பேச்சிப்பாறை தோட்டக்கலை பண்ணையில் அமைந்துள்ள தேனீ மகத்துவ மையத்தினை இஸ்ரேல் நாட்டு மாசெவ் வேளாண் அதிகாரி முனைவர் உரி ரூபின்ஸ்டெய்ன் மற்றும் திட்ட அதிகாரி பிரம்மதேவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். 2017-18ம் நிதியாண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தேனீ மகத்துவ மையம் ஆரம்பிக்கப்பட்டது. தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண் இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இந்திய தேனீ பெட்டிகள், கொசுவந்தேனீ பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்து விரிவாக ஆய்வு அதிகாரிகள் கேட்டறிந்தனர். அரசு தோட்டக்கலை பண்ணையில் அமைக்கப்பட்ட கருத்து காட்சியினை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் அன்புநகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேனீ மகத்துவ மைய கட்டிடத்தினையும் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினர். இந்த ஆய்விற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் திலீப் மற்றும் முனைவர் ஆஸ்லின் ஜோஷி ஆகியோர் செய்திருந்தனர்.

The post பேச்சிப்பாறையில் அமைந்துள்ள தேனீ மகத்துவ மையத்தில் இஸ்ரேல் அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: