சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் சென்னையில் வரும் 17ம் தெதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகாலம் தலைவராகவும், தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர்.மு.கருணாநிதி’ என்ற பெயரில் ரூ.100 மதிப்பிலான நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு தரப்பில் ஒன்றிய நிதியமைச்சகத்திடன் கேட்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ஆக.17ம் தேதி கலைஞரின் நூற்றாண்டு நாணயம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post சென்னையில் 17ம் தேதி கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீடு appeared first on Dinakaran.