×

சுதந்திர தினத்தில் விண்ணில் பாயும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-8

சென்னை: இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஒஎஸ்-8 செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மூலம் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: இஓஎஸ்-8 செயற்கைக்கோளின் முதன்மை நோக்கம், மைக்ரோ சாட்லைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், மைக்ரோசாட்லைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல் ஆகியவை அடங்கும்.

இஓஎஸ்-8 செயற்கைக்கோள் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (இஒஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (ஜிஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய மூன்று பேலோடுகளைக் கொண்டுள்ளது. இஒஐஆர் கருவி, செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் (எம்ஐஆர்) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (எல்விஐஆர்) பேண்டுகளில் படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிமலை செயல்பாடு கண்காணிப்பு மற்றும் தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவை இந்த கருவியின் செயல்பாடாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சுதந்திர தினத்தில் விண்ணில் பாயும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-8 appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Chennai ,Indian Space Research Organization ,ISRO ,Earth ,Harikota ,Andhra Pradesh ,
× RELATED நாடு முழுவதும் 78வது சுதந்திர தின கொண்டாட்டம்